ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணி : ஷீலா தீட்சித் சூசகம்

இந்தியா

புதுடெல்லி,மார்ச் 31:டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்று முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் சூசகமாக தெரிவித்துள்ளார்.டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பிஜேபி கைப்பற்ற விடக் கூடாது என்ற தீர்மானத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் உள்ளன.

இதற்காக ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சியில் ஒருபிரிவினர் விருப்பம் தெரிவித்து இருந்தனர். ஆனால், காங்கிரஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், ஏழு தொகுதிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வேட்பாளர்களை அறிவித்தார்.இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி அமைவதற்கான சாத்தியம் உள்ளது என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.