அந்தமானில் 2 மணி நேரத்தில் 9 முறை நிலநடுக்கம்

உலகம்

அந்தமான்,ஏப்.1: ந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று 2 மணி நேர இடைவெளியில் 9 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை 5.14 மணியளவில் முதலாவதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது. தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.0 ரிக்டர் என பதிவானது.

அதன்பின்னர், தொடர்ந்து பலமுறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடைசியாக 6.54 மணி வரை நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக இது ரிக்டரில் 5.2 என பதிவாகியுள்ளது.
இந்த தொடர் நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.