சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் ரயில் தடத்தில் நேற்று முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை இரவில் 3 மணிநேரம் ரயில் சேவை நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் ’செக்‌ஷன் பி’ ரயில் தடத்தில் இரவில் மூன்று மணிநேரம் மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது. சுமார் 12 நாட்கள் அதாவது மார்ச் 22 முதல் ஏப்ரல் 5 வரை இது நீடிக்கும்.

திங்கள் முதல் சனி வரை ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரங்கள்

ரயில் எண் : 40135 சென்னை கடற்கரை – தாம்பரம் , இரவு 8.28 புறப்படும்.

ரயில் எண் : 40145 சென்னை கடற்கரை – தாம்பரம், இரவு 9.39 புறப்படும்

ரயில் எண் : 40153 சென்னை கடற்கரை – தாம்பரம், இரவு 11.05 புறப்படும்

ரயில் எண் : 40155 சென்னை கடற்கரை – தாம்பரம், இரவு 11.30 புறப்படும்

ரயில் எண்: 40157 சென்னை கடற்கரை – தாம்பரம், இரவு 11.59 புறப்படும்

ரயில் எண்: 40154 தாம்பரம் – சென்னை கடற்கரை, இரவு 10.05 புறப்படும்

ரயில் எண்: 40156 தாம்பரம் – சென்னை கடற்கரை, இரவு 10.45 புறப்படும்

ஞாயிற்றுகிழமைகளில் ரத்து செய்யப்படும் ரயில்கள்

ரயில் எண்: 40403 தாம்பரம் – சென்னை கடற்கரை, இரவு 8.15 புறப்படும்

ரயில் எண்: 40407 தாம்பரம் – சென்னை கடற்கரை, இரவு 8.40 புறப்படும்

ரயில் எண்: 40419 தாம்பரம் – சென்னை கடற்கரை, இரவு 11.20 புறப்படும்

ரயில் எண்: 40421 தாம்பரம் – சென்னை கடற்கரை, இரவு 11.59 புறப்படும்