கடற்படை அதிகாரிகள் குடியிருப்பில் புகுந்த மர்ம நபர்

சென்னை

சென்னை, மார்ச் 31: சென்னை, கோட்டை அருகே கடற்படை அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. நேற்று இந்த குடியிருப்பு உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த காவலாளிகள் உடனே அந்த மர்ம நபரை பிடித்து கோட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திரா ( வயது 22) என்பதும், சென்னையில் தங்கி டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.