ராப் இசை பாடகர் நிப்சி ஹூஸல் சுட்டுக்கொலை

உலகம்

லாஸ் ஏஞ்சல்ஸ்,ஏப்.1: அமெரிக்காவைச்சேர்ந்த பிரபல ராப் பாடகர் நிப்சி ஹூஸல். நிப்சி ஹூஸல் வெளியிட்ட ”விக்டரி லேப்” என்ற ஆல்பம் இந்த ஆண்டுக்கான சிறந்த இசை ஆல்பமாக கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

3-வயதான நிப்சி ஹூஸல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துணிக்கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். துணிக்கடைக்கு வெளியே வழக்கம் போல், நின்று கொண்டிருந்த போது, நிப்சி ஹூஸல் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
பலமுறை அவரை நோக்கி சுடப்பட்டதில், நிப்சி ஹூசல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கிச்சூட்டின் போது மேலும் 2 பேர் காயம் அடைந்தனர். நிப்சி ஹூஸல் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவத்திற்கு அமெரிக்க திரைக்கலைஞர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.