இங்கிலாந்தில் வரி ஏய்ப்பு செய்து அல்கொய்தாவுக்கு நிதி உதவி

Uncategorized

இங்கிலாந்தில் வரி ஏய்ப்பு செய்து அல்கொய்தாவுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தும், அரசு ஏஜன்சிகளில் ஊடுருவியும் ஒரு மோசடி கும்பல் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா தீவிரவாதிகளிடம் பிரிட்டன் மக்களின் வரிப் பணம் கை மாற்றப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து செயல்படும் இந்த மோசடி கும்பல் தங்கள் வரி ஏய்ப்பு தொகையில் இருந்து ஒரு சதவீதத்தை தீவிரவாத இயக்கங்களுக்கு நன்கொடையாக அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இங்கிலாந்து வருவாய்த்துறையை ஏமாற்றியும் கிரெடிட் கார்டு, வங்கி மற்றும் தனிநபர் மோசடிகள் மூலமும் கடந்த இருபது ஆண்டுகளில் 80 மில்லியன் பவுண்ட் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் பணத்தில் ஒருபகுதி பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகளால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு முன்பு அந்த மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.