6 கிலோ தங்கம் திருட்டு: ராஜஸ்தான் வாலிபருக்கு வலை

சென்னை

சென்னை, மார்ச் 30: யானைகவுனி, அனுமந்தராயன் கோயில் தெருவில், தங்க நகை தயாரிக்கும் பட்டறை வைத்து நடத்திவருபவர், சுகாஷ் பட்னாகர் (வயது 46).இங்கு, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் வேலை பார்த்துவருகின்றனர். நேற்று முன்தினம் ராஜஸ்தானை சேர்ந்த ராகுல் கௌதம் (வயது 26) என்பவர் இங்கு புதியதாக வேலைக்கு சேர்ந்துள்ளார்.

நேற்று மாலை தேநீர் இடைவேளையின்போது, வெளியில் சென்ற ராகுல் மீண்டும் பட்டறைக்கு திரும்பவில்லை. அதேசமயம், பட்டறையில் இருந்து 6 கிலோ தங்கமும் காணாமல் போயுள்ளது.
இது குறித்து, சுகாஷ் அளித்த புகாரின்பேரில் யானைகவுணி போலீசார் வழக்குப்பதிந்து ராகுலை தேடிவருகின்றனர்.