போட்டியிடக்கூடாது: ஜோஷிக்கு பிஜேபி கண்டிப்பு

இந்தியா

கான்பூர், மார்ச் 26மக்களவை தேர்தலில் போட்டியிடக்கூடாது என தன்னிடம் கட்சித் தலைமை கூறியதாக பிஜேபி மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளா:ர்.பிஜேபியின் மிக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு இதுவரை மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை.

ஏற்கனவே, அத்வானி போட்டியிட்ட காந்தி நகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிடுகிறார். இந்த நிலையில், கான்பூர் தொகுதி வாக்காளர்களுக்கு முரளி மனோகர் ஜோஷி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிஜேபியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் என்னிடம் கான்பூர் அல்லது வேறு எந்த தொகுதியிலும் போட்டியிடாமல் ஒதுங்கி இருக்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே குஜராத் காந்திநகரில் கடந்த 5 முறை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக இருந்து வரும் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இந்த முறை சீட் அளிக்கப்படவில்லை. அதேபோல முரளி மனோகர் ஜோஷிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. முன்னதாக, உத்தரபிரதேச பிஜேபியின் நட்சத்திர பிரசாரர்கள் பட்டியலிலும் இரு தலைவர்களின் பெயரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.