காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 35ஏ பிரிவு நீக்கப்படும்

இந்தியா

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் 35 ஏ பிரிவை நீக்குவது என்பது 1950-ம் ஆண்டு முதலே தங்களது நிலைப்பாடாக இருந்ததாக அவர் கூறினார். மேலும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் தற்போது இது சாத்தியமாகவில்லை என தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பேசிய அமித்ஷா, 2020-ம் ஆண்டு மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். அத்தகைய சூழலில், 35 ஏ பிரிவு அரசியலமைப்பிலிருந்து நீக்கப்படும் என்றும் அவர் கூறினார்.