பிரியங்கவால் தேர்தலில் பாதிப்பில்லை சுப்பிரமணியன் சாமி

இந்தியா

புதுடெல்லி, ஏப்.1:பிரியங்கா காந்தியின் வருகையால் மக்களவை தேர்தலில் எந்த பாதிப்பும் இல்லை யென்றும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்றும் டாக்டர் சுப்பிரமணியன்சாமி கூறியிருக கிறார்.

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. இதனால், காங்கிரசுக்கு ஊக்கமளிக்க பிரியங்கா காந்தி அண்மையில் தீவிர அரசியலுக்கு வந்தார்.

மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இது குறித்து பிஜேபி தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியன் சாமி, தனியார் தொலைக் காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள் ளார்.

பிரியங்கா காந்தி வருகை குறித்து அவரிடம் கேட்டபோது, அவருடைய வருகையால் எந்த பாதிப்பும் இல்லை என்று சுப்பிரமணியன்சாமி கூறினார்.

2019ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பிஜேபி வெற்றிப் பெற்று மோடி மீண்டும் பிரதமராவார். இதற்கு பிஜேபியின் இந்துத்துவா கொள்கையும், தேசியமும் தான் காரணமாக இருக்கும். 2014-ம் ஆண்டு பிஜேபி வெற்றிக்கும் இதுதான் காரணம் என்றும் சுப்பிரமணியன் சாமி கூறினார்.

நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் பொருளாதாரம் அறியாதவர்கள். மன்மோகன்சிங் மட்டும்தான் பொருளாதாரத்தை நன்கு தெரிந்தவர் என்றும் சாமி கூறினார்.