தென் அமெரிக்காவில் அதிகரிக்கும் சிறுவர் வன்முறை

உலகம்

தென்னமெரிக்காவின் வடகிழக்கு நாடான கொலம்பியாவில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் 14 வயது சிறுவன் மேலும் இருவரை சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மெடல்லின் (Medellin) என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சிறிய கடையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த சிறுவனை கடையின் உரிமையாளர் வெளியேற்றினார்.

அப்போது அந்தச் சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் கடைக்காரரும், அருகில் இருந்த நபர்மீதும் தாக்குதல் நடத்தியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, கடந்த சில வாரங்களுக்கு முன் கொலம்பியாவில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அந்தச் சிறுவனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பியோடியை சிறுவனை போலீசார் தேடிவருகின்றனர். பொதுவாகவே வட, தென் அமெரிக்க நாடுகளில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

சமீபத்தில் ஓர் அமெரிக்க பள்ளியில் சிறுவன் கத்தி கொண்ட தாக்குதல் நடத்திய குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் சிறுவர்களை நன்கு வளர்க்க பெற்றோர் தவறியதுதான் எனப்படுகிறது.