அவென்ஜர்ஸ் திரைப்படத்தில் இணைந்த விஜய் சேதுபதி

சினிமா

வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘அவென்ஜர்ஸ்: என்ட் கேம்’ திரைப்படத்தின் ‘மார்வெல் ஆன்தம்’ தமிழில் வெளியிடப்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆண்ரியா, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இப்படத்தில் பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு நடிகை ஆண்ட்ரியா மற்றும் அயன் மேன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி தமிழில் பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.

இந்த திரைப் படத்திற்கான பின்னணி குரல் கொடுக்கையில் ஆரம்பத்தில் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டதாக விஜய் சேதுபதி தெரிவித்தார்.

இதனிடையே, ரஜினி, சல்மான் கான் போன்ற நடிகர்களை அவெஞ்சர்ஸ் படவரிசையில் இணைத்தால் எந்த கதாபாத்திரத்திற்கு அவர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த இயக்குனர் ஜோ ரூசோ, ரஜினி ஐயன் மேனாகவும் சல்மான் கான் ஹல்க் பாத்திரத்திலும் சிறப்பாக இருப்பார்கள் என்று தெரிவித்தார்.