திருத்தணி, ஏப்.5:
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஜெகத்ரட்சகனுக்கு யாதவ சங்கம் ஆதரவு தர வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் கோரிக்கை தொடர்பாக யாதவ சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வட்டத் தலைவர் அங்க யாதவ் தலைமையில் கொத்தகுப்பத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பங்கேற்ற யாதவ சங்க நிர்வாகிகள் பேசுகையில், தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான யாதவ சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும் தேசிய மாநில கட்சிகள் யாதவ சமுதாய மக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இருப்பினும் தங்களை திமுக தரப்பு அணுகி ஆதரவு கேட்டுக் கொண்டதாலும், சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலில் யாதவ சமுதாயத்திற்கு தேர்தலில் வாய்ப்பு வழங்க பாடுபடுவோம் என்று உறுதி ஏற்று எஸ்.ஜெகத்ரட்சகன் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாதவர்கள் வாக்கு திமுக வேட்பாளருக்கு கிடைக்க தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதில் யாதவ சங்க நிர்வாகிகள் முனிகிருஷ்ணன், அப்புலு,எம்.கே.தாஸ், ஈஸ்வரன்,பாபு, கிருஷ்ணன், கோபால், பரசுராமன், முனிரத்தினம், மகரந்தன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.