வேலூர், ஏப்.7: வேலூர் மக்களவை தொகுதியில் பிற இடங்களை விட அதிக அளவில் பணம் கைப்பற்றப்பட்டு இருப்பதால் கூடுதலாக துணை ராணுவப்படை யினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தொகுதி முழுவதும் முக்கிய இடங் களில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பணியில் துணை ராணுவத்தினர் ஈடுபட உள்ளனர்.  தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக கூடுதலாக 150 படைப் பிரிவுகள் விரைவில் வர உள்ளன.
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட் டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகின் றனர். கடந்த வாரம் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் ரூ.18 கோடி பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியது. இதில் ரூ.9 கோடி 200 ரூபாய் புதிய நோட்டுக்களை கொண்ட கட்டுகளா கும். இந்தப் பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருக் கலாம் என்ற அடிப்படையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இதன் அடிப்படையில் வேலூர் தொகுதியில் கூடுதலாக துணை ராணுவத்தினரை நிறுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
வேலூர் மாவட்டத்துக்கு 10 தொழில் பாதுகாப்புப் படைப் பிரிவுகள் பணியில் அனுப்பப்படவுள்ளன. தமிழகத்திலேயே வேலூரில்தான் அதிகபட்ச அளவில் பாதுகாப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பாதுகாப்புப் படை பிரிவிலும் தலா 90 வீரர்கள் இருப்பர். அதன்படி வேலூரில் மாவட்டத்தில் 1000 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதற்கு அடுத்தபடியாக, மதுரை, விழுப்புரத்தில் தலா 8 பாதுகாப்புப் படை பிரிவுகளும், சென்னை நகரம், கோவை, தேனி மாவட்டங்களுக்கு தலா 7 படைப் பிரிவுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.திருநெல்வேலி, கோவை நகரம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 6 படை பிரிவுகளும், காஞ்சிபுரம், சேலம், விருதுநகர் மாவட்டங்களுக்கு தலா 5 படைப் பிரிவுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த தகவலை மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.