சென்னை, ஜன.2:தமிழக சட்டசபை கூட்டம் வரும் 8-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்திய பின்னர், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், வரும் 8-ந் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த சபாநாயகர் தனபால், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் ஆகியோரின் மறைவுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும் என்றார்.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 4, 5, 7 ஆகிய 3 நாட்கள் விவாதம் நடைபெறும் என்று அவர் கூறினார். 8-ந் தேதி விவாதத்திற்கு முதலமைச்சர் பதில் அளிப்பார்.