சென்னை, ஜன.2: ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் தெலுங்கு டீசர் இன்று வெளியீட ப்பட்டது.

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் ஜன.10-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பேராதரவை பெற்று லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில், தெலுங்கு பதிப்பின் டீசர் இன்று காலை வெளியிடப்பட்டது. அந்த டீசரும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது இணையத்தில் ‘பேட்ட’ தெலுங்கு டீசர் வைரலாகி வருகிறது.

ஜனவரி 10-ந் தேதி தமிழகத்தில் 700 தியேட்டர்களிலும், தெலுங்கில் 500க்கும் திரைகளிலும் பேட்ட படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.