டப்பிங் யூனியன் மீது சின்மயி பாய்ச்சல்

சினிமா

மீடு விவகாரத்தில் சர்ச்சையை கிளப்பிய பாடகி சின்மயி மீது டப்பிங் யூனியன் நடவடிக்கை எடுத்தது. சங்கத்தில் இருந்து அவரை நீக்கி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சின்மயி மீண்டும் சங்கத்தில் சேர விரும்பினால் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும். மேலும் ஒன்றரை லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என டப்பிங் யூனியன் நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சின்மயி, நான் 2006- முதல் டப்பிங் யூனியனில் உறுப்பினராக உள்ளேன்.

என்னால் அதிகளவு யூனியனுக்கு வருவாய் கிடைத்துள்ளது. நான் ஏன் ரூ.1.5 லட்சம் செலுத்த வேண்டும். இப்போது புதிய உறுப்பினராக சேர சொல்கின்றனர். யூனியன் விதிப்படி புதிய உறுப்பினர்கள் ரூ.2500 செலுத்தினால் போதும். ஆனால் ரூ.1.5 லட்சம் கேட்பது ஏன் என காரணம் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.