சூர்யா, கே.வி. ஆனந்த் இணைந்த முதல் படமான அயன் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படமாக அமைந்தது மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் சூர்யாவிற்கென ஒரு புதிய மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்து அவரைத் தென்னிந்திய நடிகர்களில் முக்கியமானவராக்கியது. அதனைத் தொடர்ந்து மாற்றான் படத்தில் இணைந்தனர். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

இந்நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சூரியா-கே.வி.ஆனந்த் மீண்டும் இணைந்தனர். பெயரிடப்படாமல் படமாக்கப்பட்டு வந்த இநத படத்தில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா மற்றும் சாயிஷா சாகல் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தியப் பிரதமரின் காவல் பிரிவின் உயர்நிலை அதிகாரியாக சூர்யா நடிக்கிறார்.

இதில் பிரதமரைக் கொலை செய்ய நடக்கும் திட்டத்தை முறியடித்து எப்படி பிரதமரைக் காக்கிறார் என்பதே கதை. இந்த படத்தில் பிரதமராக மோகன் லால் நடிக்கிறார்.

முடியும் தருவாயில் இருக்கும் இப்படத்திற்கு இந்த படத்திற்கு நேற்று காப்பான் என பெயர் வைத்து படக்குழு வெளியிட்டுள்ளனர்.