சர்ச்சையில் விளம்பரம் தேடும் மகா படக்குழு

சினிமா

ஹன்சிகா நடிப்பில் ஜமீல் இயக்கத்தில் உருவாகிவரும் படம் மகா. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படம் ஹன்சிகாவின் 50வது படம் ஆகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே சர்ச்சையாக இருந்தது. செகண்ட் லுக்காலும் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் மூன்றாவது லுக் போஸ்டர் வந்துள்ளது.

மகா படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரத்தத்தால் நிரப்பப்பட்டுள்ள குளியல் தொட்டியில் படுத்துக் கொண்டு கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்துள்ளார் ஹன்சிகா.

புத்தாண்டுக்கு இப்படி ரத்தத்தை காட்டியா வாழ்த்து தெரிவிப்பது என சிலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ஹன்சிகா ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் பிடித்துள்ளது. ஹன்சிகா கெத்தாக இருப்பதாகக் கூறி பெருமைப்படுகிறார்கள்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா காவி அணிந்து தம்மடித்தார். செகண்ட் லுக் போஸ்டரில் மசூதி முன்பு தலையில் முக்காடு போட்டு தொழுதார். மூன்றாவது லுக்கில் ரத்தத்தில் குளிக்கிறார். இது போன்ற சர்ச்சையான போஸ்டர்களை வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேட மகா படக்குழு நினைப்பதாக திரை உலகினரும், சமூக ஆர்வலர்களும் ஆதங்கப்படுகின்றனர்.