சிட்னி, ஜன.2: சிட்னியில் நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய அணி மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில், இந்தியா 2-1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், சிட்னியில் நாளை தொடங்கவுள்ள 4-வது டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இதில், இசாந்த் சர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவ்வும், ரோஹித்துக்கு மாற்றாக கே.எல்.ராகுலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 4 இன்னிங்ஸ்களிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுலை ஏன் மீண்டும் எடுத்தார்கள்? என கேள்வி எழுந்துள்ளது. உடற்தகுதியில் இன்னும் முழுமையாக தேர்வாகாத அஸ்வின், இந்திய அணியில் இடம் பெற்றபோதிலும், அவர் ஆடும் லெவனில் உள்ளரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதனிடையே, இந்திய அணியின் செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில், உடற்தகுதித் தேர்வில் அஸ்வின் தோல்வி அடைந்துவிட்டதால் 4-வது டெஸ்ட்டில் அவர் விளையாடமாட்டார் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 13 பேர்கொண்ட அணியில் அஸ்வின் இடம் பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்), ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், சட்டேஸ்வர் புஜாரா, அஜின்கஹே ரஹானே, ரிஷாப் பந்த், லோகேஷ் ராகுல், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ரவிசந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.