2 நிமிடத்தில் ரூ.62 கோடி சம்பாதித்த வீரர்

உலகம்

டோக்கியோ, ஜன.2: புத்தாண்டையொட்டி நடந்த குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று போட்டி தொடங்கிய 2 நிமிடங்களிலேயே வெற்றியை தனதாக்கிக்கொண்ட பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரருக்கு ரூ.62 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

புத்தாண்டையொட்டி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கண்காட்சி குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் ஓய்வு பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் ஃபிளாய்ட் மேவெதர், ஜப்பானை சேர்ந்த கிக்-பாக்சிங் வீரர் டென்ஷின் நாசுகாவா ஆகியோர் மோதினர்.

ஜப்பானின் ரிஜின் நிறுவனம் நடத்திய இந்த போட்டியை 9 நிமிடங்கள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், போட்டி தொடங்கிய 2 நிமிடங்களிலேயே ஃபிளாய்ட் மேவெதர் வெற்றி பெற்று, 9 மில்லியன் டாலர்களை ( இந்திய மதிப்பு ரூ.62,70,75,000) பரிசுத்தொகையாக பெற்றார். தொழில்முறை போட்டிகளில் இதுவரை தோல்வியே அடையாத ஃபிளாய்ட், 50 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ளது, பாராட்டுதலுக்குரியது.