பெங்களூர், ஜன.3:கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளரும் ரஜினி நடித்த லிங்கா படத்தை தயாரித்தவரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான ராக்லைன் வெங்கடேஷ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் வீடு, அலுவலகம் உள்பட 60 இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சில திரை பிரபலங்கள் வீடுகளையும் சேர்த்து 300க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ளனர்.