லக்னோ, ஜன.5: உத்தரப்பிரதேசத்தில் பிஜேபிக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத கூட்டணியை பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடியும் சேர்ந்து அமைத்துள்ளன. லக்னோவில் நேற்று இந்த கட்சிகளின் தலைவர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் சந்தித்து பேசியதில் இந்த உடன்பாடு ஏற்பட்டது.
அஜீத் சிங்கின் ஆர்எல்டி கட்சிக்கு 3 தொகுதிகள் மட்டுமே கொடுப்பது என்றும் காங்கிரசை கூட்டணியில் சேர்க்காமல் அமேதி மற்றும் ரேபரேலியில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது.

தொகுதி பங்கீடு குறித்து ஜனவரி 15-க்கு பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணியில் சேர்க்காதது குறித்து காங்கிரஸ் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் பகுஜன் சமாஜும், சமாஜ்வாடியுமே காங்கிரசை விட செல்வாக்கு மிக்க கட்சிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.