சென்னை, ஜன. 6:தமிழக முதல்வரும், அதிமுக இணை ஓருங்கிணைப்பருமான எடப்பாடி பழனிசாமியுடன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் நேற்று தனிதனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மத்திய பிஜேபி அரசின் பதவிகாலம் இந்தாண்டு மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் முதல்வாரத்தில் வெளியிடும் என தெரிகிறது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்த லில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ள நிலையில், தமிழகத்தில் மாற்று கூட்டணியை அமைக்க வேண்டிய நிலைக்கு, அதிமுகவும் பிஜேபியும் தள்ளப்பட்டுள்ளது.

ஆகவே பிஜேபியும், அதிமுக கூட்டணி அமைத்து தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் என தெரிகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக கடந்த வாரம் டில்லி
சென்றிருந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய நிலையில், நேற்று இரவு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தனிதனியே எடப்பாடி பழனிசாமியை அவரது கிரீன்வேஸ் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதில் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்யப்பட்ட பட்டியலை எடப்பாடியிடம் வழங்கி யதாக தெரிகிறது. வரும் 27-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி தனது பாராளுமன்ற பிரசாரத்தை துவங்க உள்ளார். அதிமுக பிஜேபி கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான அறி விப்பை தமிழக பிரசார மேடையில் மோடி அறிவிப்பார் என தெரிகிறது. மேலும் அதிமுக பிஜேபி கூட்டணிக்கு பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளிடமிடமும் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது.