சென்னை, ஜன.6:உயர்நீதிமன்றத்தில் பணிக்கு சென்ற சிஐஎஸ்எப் காவலரை காணவில்லை என போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

புதுவண்ணாரப்பேட்டையில் சிஐஎஸ்எப் கேம்ப் உள்ளது. இதில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் முத்துகுமார் (வயது 40). இவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித் துள்ளார். அதில் தனக்கு கீழ் பணியாற்றும் தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லைச் சேர்ந்த நரேஷ் (வயது 28) என்ற சிஐஎஸ்எப் காவலர் நேற்று காலை உயர்நீதிமன்ற பணிக்கு முகாமிலிருந்து சென்றவர் பணிக்கு செல்லவில்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வண்ணாரப் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.