சிரியாவில் தீவிரவாத தாக்குதல்:120 பேர் பலி

உலகம்

டமாஸ்கஸ், ஜன.6:சிரியாவில் தீவிரவாதிகள் தாக்கியதில் துருக்கி ஆதரவுப் படையைச் சேர்ந்த 120 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 2011ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போரால் குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

அரசுக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகளும் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒழிக்க சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படையினரும் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் துருக்கி படைகளும் அரசு ஆதரவு போரில் இறங்கியுள்ளன.

துருக்கி ஆதரவு பெற்ற அல் ஜென்கி என்ற கிளர்ச்சி படையினரும் கடும் மோதலில் ஈடுபட்டு வந்தனர். இந்த சண்டையில் கடந்த 5 நாட்களில் கிளர்ச்சி படையை சேர்ந்த 120 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.