திருவள்ளூர், ஜன.6: திருவள்ளூர் அருகே வெல்டிங் செய்து நகைக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் 18 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை பணம் வைரகற்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூரில் உள்ள கொண்டமா புரம் தெருவில் உள்ள பிரவின் என்பவருக்கு சொந்தமான
சாந்தி ஜூவலர்ஸ் நகைக்கடை உள்ளது. இவரது நகைக்கடையில் மர்ம நபர்கள் வெல்டிங் மூலம் சட்டரின் பூட்டை உடைத்துஉள்ளே புகுந்து நகை கடையில் இருந்த 38 சவரன் தங்க நகை மற்றும் ஆறு லட்ச ரூபாய் பணம் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான 80 வைரக்கற்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கொள்ளை குறித்து நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் திருவள்ளூர் நகர போலீசார் கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளை நடைபெற்ற கடை மற்றும் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பஜார் பகுதியில் நகைக்கடையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் பொதுமக்களிடையேயும் வணிகர்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது