சென்னை, ஜன.6: பிரயாக்ராஜில் ஜன.15-ம் தொடங்கவிருக்கும் 2019 மகா கும்ப மேளாவுக்கான அனைத்து அத்தியாவசியக் கட்டமைப்புகளுக்காக ரூ.4300 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்கு அமைச்சர் ஜெய்பிரதாய் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று எப்ஐசிசிஐ சார்பில் நடைபெற்ற விழாவில் அவர் கூறியதாவது:

யுனெஸ்கோவின் பிரத்யேக மனித நேயக் கலாச்சாரப் பாரம்பரிய அங்கீகாரமாக விளங்கும் பிரயாக்ராஜ் கும்பமேளாவைச் சிறப்பாக நடத்தத் தன்னை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தூதராக நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிக்கி தலைவர் டி.ஆர்.கேசவன் உடனிருந்தார்.