குழந்தையை துண்டு துண்டாக வெட்டிய தந்தை கைது

Uncategorized

தண்டாரம்பட்டு, ஜன.6: திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). பங்க் கடை வைத்துள்ளார். இவருக்கும், ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் கார்த்திகேயன், அவரது தந்தை தனபால், ராஜேஸ்வரி மற்றும் குழந்தைகள் என அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு திடீரென அரிவாளால் வெட்டுவது போல் சத்தம் கேட்டது.

இதனால் திடுக்கிட்ட ராஜேஸ்வரி எழுந்து பார்த்தார். அங்கு கார்த்திகேயன் குழந்தையை கத்தியால் துண்டு, துண்டாக வெட்டிக் கொண்டிருந்தார்.

குழந்தை வெட்டிக் கொலை செய்யப்படுவதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என வானாபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.