புதுடெல்லி, ஜன.6: தமிழகம்- புதுச்சேரிக்கு பிஜேபியின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் தமிழக பிஜேபி தலைவர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.

மக்களவைத் தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து பிஜேபி ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி அமைத்து வருகிறது. பீகாரில் ஏற்கனவே கூட்டணி முடிவாகி விட்டது. தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைப்போம் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும், தமிழிசை சௌந்தரராஜனும் ஏற்கனவே கூறியுள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் பொறுப்பாளர்களை கட்சியின் தேசிய செயலாளர் அமித் ஷா நேற்று அறிவித்தார்.
அதன் விவரம் பின்வருமாறு:

தமிழகம், புதுவை, அந்தமான்-நிகோபர் தீவுகள் – மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், டெல்லி – மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உத்தரப் பிரதேசம் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, கர்நாடகம் – முரளிதர் ராவ் மற்றும் கிரண் மஹேஷ்வரி, ஹரியானா – கல்யாண் மிஷ்ரா மற்றும் விஷ்வாஸ் சாரங், திரிபுரா மற்றும் ஜம்மு-காஷ்மீர் – அவினாஷ் ராய் கண்ணா.