சென்னை, ஜன.7:ரூ.144 கோடி செலவிலான 555 புதிய பேருந்துகளை பொது மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு பொது மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 21,678 பேருந்துகளை இயக்கி வருகிறது. சுமார் 1 கோடியே 74 லட்சம் பயணிகள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டைமாநிலங்களுக்கும் பேருந்து சேவை மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

மக்களின் போக்குவரத்து சேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய பேருந்துகள், புதிய வழித்தடங்கள் ஆகியவை தொடங்கி வைக்கப்பட் டுள்ளன. பயணிகளுக்கு, முக்கிய பேருந்து நிலையங்களில் இணைய தள வசதி, ஓய்வு அறைகள் ஆகியவையும் செய்தி கொடுக்கப் பட்டுள்ளன. அந்த வகையில் 555 புதிய பேருந்துகள் இன்று இயக்கி வைக்கப்பட்டன.

தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அடையாளமாக 7 பேருந்துகளை அவர் கொடியசைத்து தொடங்கினார். இந்த 555 பேருந்துகளில் சென்னை மாநகர போக்குவரத்துக்கு 56 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விழுப்புரத்திற்கு 82, சேலத்திற்கு 112, கோவைக்கு 140, கும்பகோணத் திற்கு 102, மதுரைக்கு 63 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.