சென்னை, ஜன.7: பெட்ரோல், டீசல் விலை சுமார் ஒரு மாத காலத்திற்கு பின்னர் சிறிதளவு உயர்ந்து இருக்கிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, நேற்றைய விலையை விட 22 காசுகள் உயர்ந்து, 71 ரூபாய் 7 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை, நேற்றைய விலையை விட, 8 காசு அதிகரித்து, 65 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து குறைந்து வந்த பெட்ரோல், டீசல் விலை டிசம்பர் 11-ந் தேதிக்கு பின்னர் இரண்டு, மூன்று நாட்கள் உயர்ந்தது. அதன் பிறகு தொடர்ந்து இறங்குமுகத் தில் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை 25 நாட்களுக்கு பின்னர் மீண்டும் உயர்ந்துள்ளது.