ஆஸ்திரேலிய அணியை அதன் தாய்நாட்டிலேயே வீழ்த்திய நெகிழ்ச்சியான தருணம் குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், இந்திய அணியை வழிநடத்திச் செல்வதில் நான் பெருமைப்படுகிறேன், எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம், சிறப்புரிமையாகக் கருதுகிறேன். என்னை மிகச்சிறந்த கேப்டனாக அணி வீரர்கள் மாற்றி இருக்கிறார்கள்.

இங்கு 3 முறை வந்து தோல்வியுடன் சென்று இப்போது கோப்பையுடன் செல்வது பெருமையாக இருக்கிறது. என் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய சாதனையாகவும், மிகச் சிறந்த வெற்றியாகவும் இதை கருதுகிறேன். இளம் வீரர்களின் அசாத்திய திறமையால் இந்த வெற்றி கிட்டியுள்ளது. எவரும் சாதிக்காததை நாங்கள் சாதித்துள்ளோம். இது போன்ற திறமையான வீரர்களை வழிநடத்தியதில் பெருமை அடைகிறேன். நம் அணியில் மிகவும் இளம் வயதுடைய வீரர்கள் இருப்பதால், இந்த வெற்றி, எதிர்காலத்தில் அணியை மேலும் உயரத்திற்கு எடுத்துச் செல்ல உதவும். இந்திய கிரிக்கெட் வரலாற்றில், இது ஒரு மைல்கல்.