காட் மண்டு, ஏப்.1: நேபாளத்தில் புயல் மற்றும் மழையில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களாக அங்கு கனத்த மழை பெய்து வந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பாதிப்புக்குள்ளாயினர்.


இந்நிலையில் பயங்கர புயலுடன் கனமழை பெய்ததால் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். அவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் களுக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் புயல்மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்ப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.