10 லட்சம் பேர் பார்த்து ரசித்த ஜிப்ஸி டீசர்

சினிமா

குக்கூ, ஜோக்கர் படங்களைத் தொடர்ந்து, ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகும் படம் ஜிப்ஸி. ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக மிஸ் ஹிமாச்சலபிரதேஷ் பட்டம் வென்ற நடாஷா சிங் அறிமுகமாகிறார். அத்துடன் குதிரை ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில், எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவில் உருவாகும் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜிப்ஸி படத்தின் டீசர் நேற்று வெளியானது. தனது குதிரை மற்றும் கிட்டார் இசைக்கருவியுடன், நாடு முழுவதும் சுற்றும் இளைஞன், அவனுக்கு ஒரு பெண்ணின் மீது ஏற்படும் காதல் என இந்த படத்தின் டீசர் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த டீசரை ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.