அப்பா இயக்கத்தில் நடிக்க பயமாக இருந்தது: துக்ளக்

சினிமா

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படம் கடமான்பாறை. இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கதாநாயகிகளாக அனுராகவி, ஜெனி பெர்ணாண்டஸ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு மகேஷ் ஒளிப்பதிவு செய்ய ரவிவர்மா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார். இப்படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது.