கிரிக்கெட் ஆடவே நடிக்க வந்தேன்: சத்யா

சினிமா

பிரபல ஆடை வடிவமைப்பு நிபுணரான என்.ஜே.சத்யா கனா படத்தில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். விஜய் நடித்த பைரவா படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய சத்யா ஏராளமான படங்களுக்கு காஸ்டியூம் செய்து உள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ளவரான சத்யா நடிகர்கள் விளையாடும் நட்சத்திர கிரிக்கெட்டில் விளையாட ஆசைப்பட்டுள்ளார்.

தனது நண்பரான அருண்ராஜா காமராஜா கிரிக்கெட் தொடர்பான கனா படத்தை இயக்குகிறார் என கேள்விப்பட்டவுடன் தானாகவே சென்று வாய்ப்பு கேட்டு இந்த படத்தில் நடித்துள்ளார். தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தயாரிப்பாளரும், நடிகருமான சிவகார்த்திகேயனிடம் பாராட்டையும் பெற்றுள்ளார்.