3 மாதத்தில் சந்திராயன்- 2 விண்ணில் ஏவப்படும் :சிவன் தகவல்

Uncategorized

திருச்சி, ஜன.7:மூன்று மாதத்தில் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்றார் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் கே.சிவன்.

திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, 1798 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி மேலும் அவர் பேசியதாவது:-

இந்த ஆண்டில் இஸ்ரோவின் பணிகளுக்காக ரூ.30 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 23 திட்டங்களைச் செயல்படுத்திட உள்ளோம்.
சந்திரயான் செயற்கைக் கோளை விண்ணில் ஏவி இந்தியா சாதனைப் படைத்தது. இப்போது இரண்டாவது முறையாக சந்திரயான்-2 செயற்கைக்கோளை 3 மாதத்தில் விண்ணில் ஏவ உள்ளோம்.

வரும் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ககன்யான் செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்படும். இதில் மனிதனையும் அனுப்பி வைக்க உள்ளோம் என்றார்.