சென்னை, ஜன.7:வருகிற 10-ந் தேதி ஆணையத்தின் முன்பு ஆஜராக வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது.