14 ஆண்டுகளாக கோமாவில் இருந்தவருக்கு குழந்தை பிறந்தது

உலகம்

வாஷிங்டன், ஜன.7: அமெரிக்காவில் 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தைபிறந்ததால் மருத்துவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அரிசோனா மாகாணத்தின் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் விபத்தில் பாதிக்கப்பட்டு 14 ஆண்டுக்கு மேலாக கோமாவில் இருக்கும் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு கடந்த மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 14 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண் எப்படி குழந்தை பிறப்பது சாத்தியம் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. கோமாவில் உள்ள அந்த பெண் பாலியல் சீண்டலுக்குட்படுத்தப்பட்டாரா என மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.