திருப்பூர், ஜன.8: திருப்பூரிலிருந்து சபரிமலை வாபர் சாமி பள்ளிவாசலுக்கு செல்ல முயன்ற மூன்று பெண்கள் உட்பட 5 பேரை கேரள மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பெண்கள் உட்பட ஐந்து பேர் எருமேலியில் உள்ள வாபர் பள்ளிவாசலுக்கு செல்ல முயன்றனர். கேரள மாநில காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர். இதை ஏற்க மறுத்த அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் சென்ற வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சுசிலா தேவி, ரேவதி, காந்திமதி மற்றும் அவர்கள் உடன் வந்த திருப்பதி, முருகசாமி ஆகியோர் இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் ஆவர்.