சென்னை, ஜன.8: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு மூன்று நாள் விடுமறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு அடுத்த நாளான 16-ந் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டியும், 21-ந் தேதி வள்ளலார் தினத்தையொட்டியும் டாஸ்மாக் கடைகள் மூடியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26-ந் தேதி குடியரசு தினத்தையொட்டியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.