புதுடெல்லி, ஜன.8: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆலைக்கு தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன் மூலம் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.