அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு பல திரைப்படங்கள் அண்மை காலமாக உருவாகி வருகிறது. அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி என்ற பெயரில் இந்தியில் புதிய திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் நேற்று 27 மொழிகளில் வெளியிடப்பட்டது. அடுத்த சில வாரங்கள் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில் பிரதமர் மோடி பெயரில் தயாரிக்கப்படும் படம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏற்கனவே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 3 பேர் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.