மும்பை, ஜன.8:  12-வது ஐபிஎல் போட்டிகள் (2019) மார்ச் 23-ம் தேதி தொடங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.  இந்தாண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் (2019) மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருப்பதால், ஐபிஎல் போட்டியை முன்கூட்டியே நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால், ஐபிஎல் போட்டிகளை முன்கூட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 23-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. போட்டிக்கான முழு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.