சென்னை, ஜன.8: பிரபல நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சி ஒன்று தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பானது.

பல பெண்கள் கலந்து கொண்ட அந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஒருவரை ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூவரையும் தேர்வு செய்யாமல் அந்த நிகழ்ச்சியில் இருந்து ஆர்யா எஸ்கேப் ஆனார்.

இந்நிலையில் எப்பொழுது ஆர்யா திருமணம் நடைபெறும் என கோலிவுட்டில் பேசப்பட்டு வந்த நிலையில், பிரபல நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த நடிகை வேறு யாருமல்ல, கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த சாயிஷா சைகல் தான். இரு வீட்டாரும் திருமணத்துக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டதாக தெரிகிறது. எனவே, இவர்களது நிக்காஹ் அறிவிப்பு விரைவில் இருக்குமென கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.