சிறப்பு பயிற்சிக்காக அமெரிக்கா செல்லும் விஜய்

சினிமா

சென்னை, ஜன.9:அட்லீ இயக்கத்தில் விஜய் அடுத்த தாக நடிக்க உள்ள புதிய படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். இதற்காக சிறப்பு பயிற்சி எடுத்துக்கொள்ள அமெரிக்கா செல்ல உள்ளார்.

சர்கார் படத்திற்கு பிறகு நடிகர் விஜய், அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு 3-வது முறையாக அட்லீயுடன் விஜய் இணைந்துள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்ட திலிருந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் முதல் முறையாக நடிக்க உள்ளார். இதற்காக சிறப்பு பயிற்சிகளை எடுத்துக்கொள் வதற்காகவும், கால்பந்து மைதானங் களில் படப்பிடிப்பு நடத்துவதற்காக வும் விஜய் உள்ளிட்ட படக்குழு அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல உள்ளது.

மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் யோகிபாபு இந்த படத்தில் விஜய்யுடன் மீண்டும் இணைந்துள்ளார். அதேபோல் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இந்த படத்தில் கைகோர்த்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் நடிகர் விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அதேபோல் வில்லு படத்திற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்கு பிறகு தொடங்க உள்ளது. கடந்த நவம்பர் மாதம் படத் தின் பூஜை போடப்பட்டு, பெரம்பூர் பின்னி மில்லில் அரங்குகள் அமைக் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.