ரஜினி ரசிகர்களுக்கு ‘பேட்ட’ ஒரு விருந்து: கார்த்திக் சுப்புராஜ்

சினிமா

சென்னை, ஜன.9:நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினி ரசிகர்களுக்கு ‘பேட்ட’ படம் ஒரு விருந்தாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருக்கிறார்.

கபாலி, காலா போன்ற படங்களில் ரஜினியின் மேனரிசம் இல்லாததால் அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த ரசிகர்களுக்கு திருப்திப்படுத்தும் வகையில் ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கே உரிய பல மேனரிச காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

முள்ளும் மலரும் படத்தில் அவரு டைய பாத்திரத்தின் பெயர் காளி. அதே காளி பெயரில் ‘பேட்ட’யில் நடிக்கிறார். ஹாஸ்டல் வார்டனாக நடிக்கும் அவர் மாணவர்களுடன் நெருங்கி பழகுகிறார். அதனைத் தொடர்ந்து ஏற்படும் சம்பவங்கள் படத்தின் விறுவிறு காட்சி என்றும் இயக்குனர் கூறியுள்ளார்.