சென்னை, ஜன.9: எல்லை தாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்கள் அரசு சொந்த செலவில் மீட்டு இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம், தூத்துக்குடியைச்சேர்ந்த 16 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.அங்கு தொடர்ந்து சிறையில் வாடிகொண்டிருந்த அவர்களை மத்திய-மாநில அரசுகள் மீட்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மத்திய மாநில அரசுகளின் ஏற்பாட்டின் படி இன்று 16 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். அரசு சொந்த செலவில் அவர்கள் 16 பேரும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.