சென்னை, ஜன.9: மடிப்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இங்குள்ள குபேரன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நல்லுசாமி (வயது 45) என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றார். மாலையில் வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த 10 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் ஆவணங்களை காணவில்லை. இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.